Sexual complaint:தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை தட்டி தூக்கியது போலீஸ்!

Advertisements

பெங்களூர்: பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயது பெண் நடன இயக்குநருக்கு அவருடைய 16 வயது முதலே பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 21 வயது இளம் பெண்ணை அவருடைய 16 வயதிலிருந்து பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜானி மீது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜானி தலைமறைவானார். அவரைப் போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஜானி மாஸ்டர் பெங்களூரில் பதுங்கியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இவரது இயற்பெயர் ஷேக் ஜானி பாஷா ஆகும். தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன், ராம் சரண், ரவி தேஜா உள்ளிட்டோருக்கு நடனத்தை இயக்கிப் புகழ் பெற்றவர் ஜானி. இவர் தமிழிலும் நடிகர்கள் விஜய், தனுஷ் உள்ளிட்டோருக்கு இவர் நடன இயக்குநராக இருந்துள்ளார். காந்த கண்ணழகி, ரவுடி பேபி, செல்லம்மா, ரஞ்சிதமே, அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா, ஜெயிலர் படத்தில் காவாலா, மேகம் கருக்காதா, புஷ்பா படத்தில் ஸ்ரீவல்லி உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனத்தை அமைத்துள்ளார். மேகம் கருக்காதா பாடலுக்கு ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது கிடைத்தது. கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர்களும் களத்தில் இருக்கிறார்கள். அதுபோல் புதிதாக வந்த ஜானி மாஸ்டரும் பிரபலங்களுக்க கொரியோகிராப் செய்கிறார். இப்படி புகழ் பெற்ற ஜானி மாஸ்டர் மீத 21 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரைத் தெரிவித்துள்ளார்.

“அதாவது அந்தப் பெண் ஜானி மாஸ்டருடன் பணியாற்றியபோது சென்னை, ஊட்டி, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு சூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு தன்னை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் சைபராபாத்தில் உள்ள ராய்துர்கம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் அந்தப் பெண் கூறியிருப்பதாவது: நான் கடந்த சில மாதங்களாக ஜானி மாஸ்டருடன் சில திரைப்படங்களில் பணியாற்றினேன். படப்பிடிப்புக்காக நான் அவருடன் சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றபோது என்னை அவர் பல முறை பலாத்காரம் செய்துள்ளார். அதுபோல் ஹைதராபாத்தில் நான் வசிக்கும் நார்சிங்கி பகுதியில் உள்ள வீட்டில் வைத்தும் அவர் என்னைப் பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாகப் போலீஸார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நண்பர்கள் பேட்டி” இந்த நிலையில் ஜானி மாஸ்டர், ஆந்திரா மாநிலத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். அவர்மீது பாலியல் புகார் வந்ததை அடுத்து பவன் கல்யாண், ஜானி மாஸ்டரை தனது கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதுபோல் தெலுங்கு சினிமாவிலும் அவருக்குப் பணியைக் கொடுக்க ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *