Villivakkam: லாரியில் கொண்டுவரப்பட்ட பாஜகவின் கொடிகள் மற்றும் தொப்பி பறிமுதல்!

Advertisements

சென்னை: சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட பாஜகவின் கொடிகள் மற்றும் தொப்பிகளைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வில்லிவாக்கம் காவல்துறையினர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் ஹரியானா மாவட்டத்திலிருந்து வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர்.

அதில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் கொடிகள் மற்றும் தொப்பிகள் உள்ளிட்டவை லாரியில் மூட்டையில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து ண்டிப்பெற்ற விசாரைணயில் வடசென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதியில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்காகக் கொடிகள் மற்றும் தொப்பிகளைக் கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

உரிய அனுமதியின்றி கொடிகள் மற்றும் தொப்பிகளைக் கொண்டு வந்த லாரியின் ஓட்டுநர், உரிமையாளர், அதனை அனுப்பி வைத்த நபர்கள்குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *