Senthil Balaji:நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டிப்பு!

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 40வது முறையாக, ஜூன் 25ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு விதிக்கப்பட்டு இருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது. காணொலி வாயிலாகச் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில், காவலை ஜூன் 25ம் தேதிவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்தது.

புதிதாக மனு

இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய மனுமீதான உத்தரவைத் தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் இன்று (ஜூன் 19) புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரவு

வங்கி ஆவணங்கள் தொடர்பாகத் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதால் தீர்ப்பைத் தள்ளி வைக்க வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் எனச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *