விஜய் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது..செங்கோட்டையன்!

Advertisements

விஜய் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று தவெக நிர்வாகக்குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை, கோபிச்செட்டிபாளயத்தில் முன்னாள் அமைச்சரும் தவெக நிர்வாகக்குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையனுக்கு தனது ஆதரவாளர்களும் தவெகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, அவர் அனைவரும் மத்தியிலும் பேசியப் போது, தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளே தமிழகத்தை ஆள வேண்டுமா? அல்லது புதிய தலைமுறையினர் ஆள வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவர், தலைவர் விஜய் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார். எந்த படம் சட்டையில் வைத்திருந்தாலும் என் தலைவர் ரசிப்பார். மேலும், எல்லோரையும் அரவணைப்பவர் என்று பெருமிதமாகக் கூறினார். பின்னர், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியாக இருந்ததைபோல் விஜய்க்கும் வழிகாட்டியாக இருப்பேன் என்றார். தொடர்ந்து பேசியப் அவர், டிசம்பர் மாதத்திற்குள் நம்முடையக் கூட்டணி வலிமையாக மாறும் நம்மோடு இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் வருவார்கள் என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *