தவெகவில் இணைந்த செங்கோட்டையன் மற்றும் சத்யபாமா!

Advertisements

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் சத்யபாமா உள்ளிட்டோர் அவர்களது ஆதரவாளர்களுடன் தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைவர் விஜய் முன்னிலையில் த.வெ.க. வில் இணைந்தனர். இதை தொடர்ந்து, செங்கோட்டையன் மற்றும் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் சத்யபாமா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கு த.வெ.க. துண்டு அணிவித்து உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார். இதுகுறித்து தவெக  தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். இதில், 20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்.ஜி.ஆரை நம்பி அவருடைய மன்றத்தில் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் என்றும் சின்ன வயதிலேயே சட்டமன்ற உறுப்பினர் என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய விஜய், 50 ஆண்டு ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்களுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும்  தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஒரு பெரிய உறுதுணையாக இருக்கும் என்று கூறினார். இதையடுத்து, நல்லது மட்டுமே நடக்கும்,வெற்றி நிச்சயம் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *