திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்..!

செங்கல்பட்டு மாவட்டத்தில், திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ள மறைமலை நகரில் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.

பின்னர், அவர் மேடையில் பேசிய போது பாஜகவின் அறுவைச் சிகிச்சையால் அதிமுக ஐ.சி.யூ.வில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும் அவர், அதிமுகவைப் பாஜகவிடம் இருந்து மீட்க வேண்டும் என்றார். பின்னர், கழகத்தின் கொள்கையையும், சாதனையையும் எடுத்துச் சொல்லி உரையாற்றினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி, வரலட்சுமி, அன்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *