
அண்ணா, எம்ஜிஆர் போல நடிகர் விஜய்யை மக்கள் ஏற்பார்களா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும் என புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் 75வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஆயிரம் பேருக்கு அரிசி மூட்டை, வேட்டி ,பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை ஏ.சி. சண்முகம் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜிஎஸ்டி வரி குறைப்பில் மத்திய அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
இதனால், வீட்டு உபயோகப்பொருட்களை வாங்க மக்கள் கடைகளில் குவிந்து வருகிறார்கள் என்றும் இது மோடியின் பொற்கால ஆட்சி என்று பிரதமருக்கு புகழாரம் சூட்டினார்.
பொருளாதாரத்தில் 14வது இடத்தில் இருந்த இந்தியாவை 4ஆம் இடத்திற்கு மோடி கொண்டு வந்துள்ளார் என்றும் விரைவில் இந்தியா வல்லரசு நாடாகும் எனக் கூறினார்.
இதனை யடுத்து, புதிய நீதிக் கட்சியின் பொதுக்குழுவை விரைவில் கூட்டி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.
அண்ணா, எம்ஜிஆர் போல நடிகர் விஜய்யை மக்கள் ஏற்பார்களா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும் எனக் கூறினார்



