
ஏமன் மீது தாக்குதல் நடத்துவது பற்றி சிக்னல் எனும் மெசேஞ்சரில் அமெரிக்க அதிகாரிகள் பேசியிருப்பது தற்போது பொது வெளியில் வெளியாகியுள்ளது. எல்லா தாக்குதலையும் திட்டமிட்ட டிரம்ப் தலைமையிலான அதிகாரிகள், தற்போது இவர்களின் திட்டம் வெளியாகியுள்ளது . சிக்னல் மிகவும் பாதுகாப்பாக மெசேஜிங் ஆப்-ஆக இருந்து வருகிறது. இதில் பகிரப்படும் மெசேஜ்களை எளிதில் குறிவைத்து செய்து கண்டுபிடிக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. எனவே அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த செயலியை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 11ம் தேதி சிக்னல் ஆப்-ல் குரூப் ஒன்று உருவாக்கப்பட்டது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் தவறுதலாக The Atlantic இதழின் ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பெர்க்-ஐ இந்த குரூப்பில் இணைத்திருக்கிறார். இக்குழுவில் ஏற்கெனவே, அமெரிக்க துணை அதிபர் JD வான்ஸ், பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், தேசிய புலனாய்வு இயக்குநர் துல்ஸி காபார்ட், CIA இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் போன்ற முக்கிய அதிகாரிகள் இருந்துள்ளனர்.
மார்ச் 13ம் தேதி ஏமன் மீது 72 மணி நேரத்தில் நடத்தப்பட வேண்டிய தாக்குதல் குறித்து கலந்துரையாடல் நடந்திருக்கிறது . மார்ச் 15 அன்று தாக்குதல் பற்றிய நேரம், விமானங்கள், திட்டம், குறிக்கோள்கள் போன்ற விவரங்கள் பகிரப்பட்டிருக்கிறது. அதன்படி
இந்த தாக்குதல் திட்டம் பற்றி சில கேள்விகள் எழாமல் இல்லை. துணை அதிபர் JD வான்ஸ், “ஐரோப்பிய நாடுகளுக்காக நாம் எதற்கு இந்த சுமையை சுமக்க வேண்டும்? இந்த தாக்குதல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்க கூடும். எனவே ஒரு மாதம் தள்ளி போடலாம்” என்று பேசியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த பீட் ஹெக்செத், “இது காலத்தின் தேவை. முக்கியமான தாக்குதல். ஒரு மாதம் தள்ளி போனாலும் கூட இந்த சிக்கல் தீராது. நாம் இப்போது இதை செய்யாவிட்டால் நாம் பேசிய விஷயங்கள் கசியலாம்” என்று கூறியிருக்கிறார்.
தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. “ஹவுதிகளில் ஏவுகணை தாக்குதல் பிரிவு தலைமை அதிகாரி அடையாளம் காணப்பட்டிருக்கிறார். அவர் தங்கியிருந்த கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது” என்று மைக் வால்ட்ஸ் கூறியுள்ளார். உடனே வான்ஸ், “சிறப்பு” என பாராட்டியிருக்கிறார்.
இவர்கள் போட்ட அனைத்து திட்டமும் வெளிவட்டமாக அனைவருக்கும் வெளிச்சமாகி விட்டது இது எதையுமே டிரம்ப் தரப்பினர் திரும்பி கூட பார்க்கவில்லை. நேற்று இந்த சாட்கள் தொடர்பான அனைத்து ஸ்கிரீன்ஷாட்களும் The Atlantic இதழில் வெளியாகியிருக்கிறது. அவ்வளவுதான் அமெரிக்க பாதுகாப்புத்துறை மொத்தமும் ஆட்டம் கண்டது. தொடக்கத்தில் இதை மறுத்தாலும், போதுமான ஆதாரங்கள் இருந்ததால் அதிகாரிகளால் சமாளிக்க முடியவில்லை. தாக்குதலுக்கு போடப்பட்ட திட்டம் எல்லாம் சரிதான். இது அமெரிக்க மக்கள் மத்தியில் அரசுக்கு எதிராக கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு நடத்தும் முதல் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
