
செங்கல்பட்டு மாவட்டம் திருவத்தூரில் நிலத் தகராறு தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளரின் செல்போனைச் செய்யூர் காவல் ஆய்வாளர் பாபு தட்டிவிட்டுள்ளார்.
செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவுஞ்சூர் திருவத்தூரைச் உதயகுமாருக்குச் சொந்தமான இடத்தில் அவரது தந்தை தவறுதலாக லோகநாதன் என்பவருக்கு ஒன்றரை சென்ட் நிலத்தை விற்றுள்ளார்.
உதயகுமாரின் தந்தை இறந்து 20 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இது தொடர்பான வழக்கு செய்யூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலத்தில் கட்டடம் கட்டுவதற்கு லோகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுவிட்டார். லோகநாதனின் நிலத்தை அளந்து எடுக்கும்படி உதயகுமார் கூறிவிட்டார்.
இந்நிலையில் லோகநாதனுக்கு ஆதரவாகச் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, அவர் மகன், அவர் உறவினர்கள் திரண்டனர். அப்போது காவல்துறையினர் உதயகுமாரைக் கைது செய்ய முயன்ற போது அவர் தன்னுடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.
அதற்குப் பிறகும் செய்யூர் காவல் ஆய்வாளர் பாபு தாக்குதல் நடத்தி உதயகுமாரையும் அவர் உறவினர்களையும் கைது செய்தார். கைது செய்து அழைத்துச் சென்ற போது தொலைக்காட்சிச் செய்தியாளர் தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார்.
அப்போது காவல் ஆய்வாளர் பாபு அந்தச் செல்போனைத் தட்டி விட்டுச் சென்றார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.


