அமைச்சர் பி.மூர்த்தி சுய உதவிக் குழுக்களுக்கு 131 கோடி ரூபாய் கடன் வழங்கல்.!

மதுரையில் நடைபெற்ற விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 131 கோடி ரூபாய் கடன்களை வழங்கினார்.

மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், அடையாள அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்று 1702 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 131 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்பு வழங்கினார். மேலும் 1480 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி, மகளிர் சுய உதவிக் குழுவினர் உறுப்பினர் அடையாள அட்டையைப் பயன்படுத்திப் பேருந்துகளில் 25 கிலோ வரை பொருட்களைக் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகராட்சி மேயர் இந்திராணி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மகளிர் திட்ட அலுவலர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *