விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் ஜெயம் ரவி!

Advertisements

சென்னை: 

விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் நேற்று ஆஜராகினர்.

நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி என்பவரைக் காதலித்து கடந்த 2009-ம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன்பாக ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த வழக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியும் நேரில் ஆஜராகி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மத்தியஸ்தர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து இந்த வழக்கு விசாரணை வரும் டிச.7-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *