Seeman: திராவிட மாடல் என்பது தீஞ்சு போன மாடல்!

திராவிட மாடல் என்பது தீஞ்சு போன மாடல் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: இது தொடர்பாக, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தவறான ஆட்சி நடப்பதற்கு, அதைத் தேர்வு செய்த மக்களும் தான் காரணம். படித்தவர்கள் தான் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்; ஆனால், வர விடமாட்டார்கள்.

பிரச்னைகளைக் காலம் கடத்தவே, அரசு ஒவ்வொன்றுக்கும் குழு அமைக்கிறது. ராஜாவைவிட உதயநிதிஸ்டாலின் பெரியவரா. ஸ்டாலின் மகன் என்பதை தவிர வேறு என்ன அவருக்குத் தகுதி உள்ளது.திராவிட மாடல் என்பது தீஞ்சு போன மாடல். அன்று ஹிந்தி தெரியாது போடா என்றவர்கள், இன்று ஹிந்தி தெரியுமா வாடா என, ஐ.டி., பிரிவிற்கு தி.மு.க., வில் ஆட்கள் எடுக்கின்றனர்.

காவிரி நதிநீர் பிரச்னையில், தி.மு.க., எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ரயில் மறியல் செய்தது. ஆளும் கட்சியாக உள்ளபோது மவுனமாக உள்ளது. 50 ஆண்டுக் காலம் ஆண்ட காங்கிரஸ் நாட்டை நாசமாக்கி விட்டது. என்னைப் பற்றிப் பேசவில்லை என்றால், தமிழக காங்., தலைவரைக் கட்சியில் வைத்திருக்கமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *