
அக்டோபர் 2 சர்வதேச அகிம்சை தினம்
சர்வ தேச அகிம்சை தினம், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ஆம் தேதி உலக அளவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் தந்தையும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைவருமான மகாத்மா காந்தியின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் சர்வதேச அகிம்சை தினம் கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலேயர்களின் அடிமைத்தளத்திலிருந்து இந்தியாவை விடுவிக்கச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடியபோது, காந்தி மட்டுமே அமைதியான அகிம்சை வழியில் போராடினார். இவர் 1860 -ல் குஜராத்தில் உள்ள போர்பந்தர் என்ற ஊரில் பிறந்தார்.
புகழ் பெற்ற உலகத் தலைவர்களில் இவருக்கு முதலிடம். அவர் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி மற்றும் உத்வேகம்.
மேலும் இன்று லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த நாளாகும். நாமும் அகிம்சை வழியைப் பின்பற்றுவோம் .



