ரஜினிகாந்தின் 173வது திரைப்படத்தின் அடுத்த சர்ப்ரைஸ்.!

Advertisements

ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தை சுந்தர்.சி இயக்க இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியானது . அதனுடன், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், இதனை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இப்படியான சூழலில், திடீரென படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி அறிவித்தார். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத காரணத்தால் ரஜினிகாந்தின் 173ஆவது படத்திலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்ததாக சுந்தர்.சி தனது விலகல் அறிவிப்பில் குறிப்பிட்டார்.

சுந்தர்.சி விலகலை அடுத்து ரஜினி – கமல் கூட்டணியில் உருவாகும் படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் போன்ற பெயர்கள் அடிபட்ட நிலையில், திடீர் சர்ப்ரைஸாக ரஜினி நடிக்கும் படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராம்குமார் பாலகிருஷ்ணனின் கதைக்கு பச்சைக் கொடி காட்டியதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.

குறுகிய காலத்தில் தமிழ், மலையாளம் என அடுத்தடுத்த மொழி படங்களுக்கு, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஒப்பந்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *