”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா? – சீமான் ஆவேசம்.!

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் நாட்டையே உலுக்கியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் காவல்துறை மற்றும் அரசின் சதி இருக்கிறது ஒரு பொதுவான அமைப்பு இருந்தால் தான் உண்மை வெளிவரும். .

மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஸ்தோகி மற்றும் காவல்துறையில் ஐ.ஜி. பதவிக்குக் குறையாத, தமிழகப் பிரிவைச் சேர்ந்த, ஆனால் தமிழ்நாட்டைச் பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், இந்த உச்ச நீதிமன்ற உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த  அறிக்கையில், ” கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *