Seeman: அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்!

சென்னை: ‘அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கொரட்டூரில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: 10 ஆண்டுகளில் செய்த சாதனை என்ன? என்று பா.ஜ., வால் கூற முடியுமா?. மாநில உரிமை பேசிய திமுக கட்சி இந்தியாவை காப்பாற்ற போகிறோம் என்று போய்விட்டது.சூரியன் சின்னத்தில் ஓட்டு போடாவிட்டால் பெண்களுக்குத் தரும் ரூ. ஆயிரத்தை நிறுத்திவிடுவோம் எனத் திமுக கூறுகிறது. இது ஒரு கட்சி. இதுக்கு ஒரு தலைவர் அதுக்கு திராவிட மாடல் என்று வேற, ஐயோ.

தமிழர்கள் எவரையும் மற்ற மாநிலத்தவர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டதில்லை. நீ மட்டும் ஏன் யார் வந்தாலும் தலைவன் என்கிறாய்?. வேளாண் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்டு, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர். இதில் பல கோடி ரூபாய்களை முதலீடு செய்கின்றனர்; விழித்துக் கொள்ளுங்கள். விழிப்புணர்வே விடுதலையின் முதல்படி. எனக்கும் தன்னலம் உண்டு. என் இனத்தின் நலன் தான் என் தன்னலம். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *