Seeman: 5 வயதில் அரசியலில் குதித்தவன் நான்!

Advertisements

5 வயதில் நான் அரசியலுக்கு வந்தவன் என்றும், நான் பழகாத தலைவர்களே கிடையாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்…

கோவையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர்:- நடிகர் விஜய் முதலில் அரசியலுக்கு வர வேண்டும் அதன் பின் அவரது கொள்கைகளை முன்வைக்க வேண்டும் அதன் பிறகுதான் கூட்டணிகுறித்து ஆலோசிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை குறித்த செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த அவர் தம்பி அண்ணாமலை 37 விழுக்காடு வாக்குகள் பெறுவார் எனில் கூட்டணி எதற்கு, அண்ணன் எடப்பாடி வீட்டிற்கு நடைபயணம் எதற்கு எனவும் விமரர்சித்தார்.பின்னர் திமுகவுக்கும் எங்களுக்கும் இடையே பங்காளி சண்டை இருக்கும் அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் விஜயலக்ஷ்மி பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர் யார் மேலதான் அந்த அம்மா புகார் அளிக்கவில்லை… அதுல ஒண்ணு நானு அவ்ளோதான் அத கண்டுக்காம போய்ட்டு இருக்கணும் எனவும் கூறினார்.அதனைத் தொடர்ந்து பேசிய சீமான் 5 வயதில் நான் அரசியலுக்கு வந்தவன் என்றும், நான் பழகாத தலைவர்களே கிடையாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *