Suicide Attempt: சபாநாயகர் முன்பாக பெண்ணால் பரபரப்பு!

Advertisements

சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்ட நிகழ்ச்சியில்பெண் திடீரெனத் தனது கையில் வைத்திருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றித் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

நெல்லை: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 5 ஆயிரம் பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 77 பவர் டில்லர்களை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திலிருந்து வந்த ஒரு பெண் திடீரெனத் தனது கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து தன் மீது மண்எண்ணெயை ஊற்றித் தற்கொலைக்கு முயன்றார்.

உடனே அருகில் இருந்த விவசாயி ஒருவர் அந்தக் கேனை பிடுங்கினார். அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் பாளை மனக்கவாவலம்பிள்ளை நகர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலாஜி என்பவரது மனைவி வேளாங்கண்ணி (வயது 40) என்பது தெரியவந்தது.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு வாங்கியிருந்ததாகவும், அவர்கள் கந்து வட்டி கேட்டுக் கொடுமைப்படுத்துவதாகவும், எனவே தான் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் கூறினார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *