இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி.!

குவகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி, தொடரை இரண்டுக்குப் பூச்சியம் என்கிற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அசாமின் குவகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 489 ரன்களும், இந்திய அணி 201 ரன்களும் எடுத்தன.

இரண்டாம் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தபோது இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

இதையடுத்து 549 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர இறுதியில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. ஐந்தாம் நாளான இன்று இந்திய அணி வெற்றிபெற மேலும் 522 ரன்களை எடுக்க வேண்டி இருந்தது.

இந்நிலையில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 408 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்றது. போட்டித் தொடரையும் இரண்டுக்குப் பூச்சியம் என்கிற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்திய அணியில் ஐந்து பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டினர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் மார்க்கோஸ் ஜான்சனும், இரண்டாம் இன்னிங்சில் சைமன் ஹார்மரும் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தித் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *