பிரான்சில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தி ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி தொடர் நடைபெற்றது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் அல்காரஸ் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஷெல்டனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். நடப்பு ஆண்டில் அல்காரசின் 9-வது பட்டம் என்பது குறிப்பிட்டத்தக்கது.



