அமெரிக்க தேர்தலில் அதிபர் டிரம்பின் தோல்வி காரணமாக கடந்த சில நாள்களாக மத்தியஸ்தர்கள் எவரும் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராகச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் போர் தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராகச்சி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடந்த சில நாள்களாக மத்தியஸ்தர்கள் எவரும் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்று கூறினார். அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அனைவரிடமும் உண்டாக்கிய அதிர்ச்சியே இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில், அமெரிக்க வாக்காளர்கள் தங்கள் முடிவை எடுத்துவிட்டதாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக நிபந்தனைகளை நிறைவேற்றுமாறு, அதற்கான பலன்களைக் காண்பீர்கள் என்றும் கேட்டுகொண்டார். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், போராட்ட குணம் உள்ள தங்களின் வீரர்கள் நரகத்தை மழையாகப் பொழிவதைக் காண்பீர்கள்” என்று எச்சரித்துள்ளார்.


