விஜயுடன் கூட்டணியா?.. சஸ்பென்ஸ் வைக்கும் நயினார் நாகேந்திரன்..!

Advertisements

அதிமுகவில் இருந்து பாஜக கட்சியில் இணைந்து அதன் பின்னர் அக்கட்சியின் மாநில தலைவராக பதவி ஏற்றுள்ளார். விஜய் கட்சிக்கு மட்டுமல்ல எல்லாவற்றிக்கும் தமிழ்நாடு அரசு தடை போடுகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்குமா என்பது குறித்தும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து, தூத்துக்குடியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, சாதி வாரிய கணக்கெடுப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைய விவாதம் நடந்துள்ளது. இந்த கணக்கெடுப்பை, மாநில அரசு எடுக்க வேண்டுமா, மத்திய அரசு எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசப்பட்டது. மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரள எல்லையில் துறைமுகம் திறக்கப்பட்டதால் நமக்கு வர வேண்டிய திட்டங்களில் எந்த பாதிப்பும் இல்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு எதிர்ப்புகள் காரணமாக துறைமுக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் வர இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணியில் கட்சிகள் சேர்வது குறித்து அப்போது தெரியவரும். மத்திய அரசின் அறிவிப்புக்கு கேரள முதல் மந்திரியே பாராட்டி தான் பேசியுள்ளார். தமிழ்நாடு அரசு விஜய் கட்சிக்கு மட்டுமல்ல திருவல்லிகேணியில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கும் தடை விதித்தார்கள். தமிழ்நாடு அரசு எல்லாவற்றிக்கும் தடை விதிக்கிறது என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *