Crime: “கள்ளக்காதல்” – மொத்த குடும்பம்மும் கிளோஸ்!

Advertisements

கள்ளக்காதல் மோகம் ஒரு குடும்பத்தின் நிம்மதியை சிதைத்து விடும் என நாளுக்கு நாள் நடக்கும் சம்பவங்கள் நமக்குப் பாடம் புகட்டி வரும் நிலையில், மீண்டும் ஒரு கள்ளக்காதல் கொலை அரங்கேறி உள்ளது. மத்தியபிரதேசத்தில் நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தின், குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தியான் சிங் – ஜோதி ரத்தோர் தம்பதி. இந்தத் தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். தியான் சிங் மத்திய பிரதேச காவல் துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் மனைவி ஜோதி ரத்தோருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் உதய் இண்டௌலியா என்பவரோடு நல்ல பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக உருவாகி இருவரும் தியான் சிங் இல்லாத நேரத்தில் தனிமையில் சந்தித்து கள்ளக் காதலை வளர்த்து வந்துள்ளனர். ஆனால், தியான் சிங்குக்கு தெரியாத அளவில் இவர்கள் இருவரும் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தியான் சிங் பிளாஸ்டிக் கடை ஒன்றின் திறப்பு விழா வைத்துள்ளார். அதற்கு அருகில் இருப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் அழைத்துள்ளார். அப்போது உதய் இண்டௌலியா குடும்பமும் அங்கே வந்துள்ளனர். விழா பரபரப்பாகச் சென்றுக் கொண்டிருக்க, கள்ளக் காதலனான உதயை மொட்டை மாடிக்கு வரவழைத்து அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார் ஜோதி.

அந்த நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், தாயை தேடி மொட்டை மாடிக்கு வந்துள்ளான். அப்போது, இவர்கள் தனிமையில் இருப்பதை சிறுவன் பார்த்துவிட்டான். எங்கே அம்மா இப்படி இன்னொருவரோடு இருப்பதை பார்த்தேன் எனக் கூறி விடுவானோ என எண்ணிய ஜோதி, பெற்ற மகன் என்றும் பாராமல், மாடியிலிருந்து துளி கூட மனம் கூசாமல் தள்ளி விட்டுள்ளார். இவை அனைத்தையும் செய்து விட்டு எதுவும் தெரியாதது போல, மாடியிலிருந்து மகன் கீழே விழுந்து விட்டானெனக் கூறி அழுதுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உள்ளனர். இதனால் குடும்பமே சோகத்தில் இருந்துள்ளது.

ஆனால், பெற்ற மகனைத் தானே கொலை செய்து விட்டோம் என்கிற சலனம் மனதை வதைத்த நிலையில், ஜோதிக்கு பயங்கர சொப்பனங்கள் வந்துள்ளன. இதனால் நடந்தவற்றை கணவரிடம் கூறி உள்ளார். அதன்படி, பக்கத்து வீட்டில் வசிக்கும் உதய் இண்டௌலியா உடன் கள்ள காதல் இருந்ததும், ஏப்ரல் 29 அன்று விழா நிகழ்ந்தபோது மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்தபோது மகன் தன்னை வேறு ஒருவருடன் பார்த்து விட்டதாகவும். வெளியே சொல்லி விடுவானோ என்கிற பயத்தில் தானே மாடியிலிருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்து விட்டதாக அனைத்தையும் கூறி உள்ளார்.

நடந்தவற்றை கேட்டுப் பதறிப் போன தியான் சிங், உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் உதய் இண்டௌலியா மற்றும் ஜோதி ரத்தோர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறு வந்துவிடுமோ எனப் பெற்ற மகன் என்றும் பாராமல் தாயே கொலை செய்தபின்னர் சிறை சென்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *