
கோடம்பாக்கம் பிரதான சாலையில் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தின் சக்கரத்தின் அடியில் ஸ்கேட்டிங் அடிக்கும் அபாயகரமான பயணம் சக பயணிகளை அச்சம்மடையச்செய்துள்ளது.
சென்னை ஐயப்பன் தாங்கல் To வள்ளலார் நகர் மின்ட் வரை செல்லக்கூடிய அரசு பேருந்தில் கோடம்பாக்கம் பிரதான சாலை வழியாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை அதிகாரிகள் படியில் பயணம் நொடியில் மரணம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் செவி சாய்க்காத பட்சத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் நாளுக்கு நாள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோடம்பாக்கம் பிரதான சாலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஓடும் பேருந்தில் ஃபுட் போர்டு அடித்துக் கொண்டும் பேருந்துமேல் ஏரியும் பேருந்துச் சக்கரத்துக்கு அடியில் ஸ்ட்டிங் செய்தும் வருவதால் பேருந்துப் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
மேலும் அரசுப் பள்ளி மாணவர்களை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் ஓட்டுனர்களையும் நடத்துனர்களையும் படு கேவலமாகத் திட்டித் தப்பி ஓடி விட்டனர் எனக் கூறப்படுகிறது. மேலும் இதே நாளுக்கு நாள் அரசு மாணவர்கள் இது போன்ற சாகசம் என்கிற பெயரில் அட்டகாசம் செய்து வருகின்றன என ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றன.
சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களைக் கோடம்பாக்கம் போலீசார் நடவடிக்கைகளை எடுப்பார்களா? எனக் கேள்வி எழுப்புகின்றனர் அரசுப் பேருந்துப் பயணிகள்.

