பல உயிர்களைக் காப்பாற்றிய கிராமத்து சிறுவனின் செயலால், ஒரு பேராபத்து தடுக்கப்பட்டது.
வடக்கு வங்காளதேசத்தில் மல்டா மாவட்டம் ஜங்கர்பாரா கிராமத்தில் வசிக்கும் மர்சலிம் ஷெய்க். கடந்த சில நாட்களாக அவன் வசிக்கும் பகுதியில் கடும் பனி காரணமாக ஒரே புகை மூட்டமாகக் காணப்பட்டது.
இதன் காரணமாகச் சாலைகள் மற்றும் ரயில் தடங்கள் எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை. மர்சலிம் ஷெய்க் வீட்டின் அருகே தான் ரயில் பாதை செல்கிறது. அந்த இடம் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவன் வீட்டைக் கடக்கும் அனைத்து ரயில்களின் பயண நேர எல்லாம், மர்சலீனுக்கு அத்துப்படி. சம்பத்தன்று அவன், ரயில் பாதையில் தண்டவாளம் உடைந்திருப்பதைக் கண்டான்.
அதே சமயம், அந்த நேரத்தில் ரயில் வரும் என்பதால் அதை எப்படியாவது நிறுத்த எண்ணி சமயோசிதமாகச் செயல்பட்டான். தன் வீட்டிற்கு சென்று சிவப்பு நிற சட்டை போட்டுக் கொண்டு ரயில் பாதை நோக்கி ஓடி வந்தான்.
ரயிலும் துரத்தில் வந்து கொண்டிருந்தது, மர்சலின் ரயில் பாதையில் நின்று கொண்டு ரயிலை நிறுத்துமாறு கைகளை மேலே தூக்கி ஆட்ட, அதிர்ஷ்டவசமாக ரயில் ஓட்டுநர் சிறுவனைப் பார்த்து, ஏதோ விபரீதம் என ரயிலை நிறுத்தினார்.
பெரிய விபத்து தடுக்கப்பட்டது, உயிர்களும் காப்பாற்றப்பட்டது. அனைவரும் சிறுவனுக்கு நன்றி கூறியதோடு, பாராட்டிச் சென்றனர்.


