
உலக முன்னேற்றம் செழிப்பு ஆகியவற்றுக்காகப் பாடுபடுவதற்கு அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு உள்ளதாகப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
அப்போது மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலகை எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும், அவற்றை எதிர்கொண்டு சமாளிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் ஜி 20 மாநாட்டின் இரண்டு அமர்வுகளில் தான் கலந்துகொண்டு முதன்மையான விவகாரங்கள் குறித்துத் தன்னுடைய கருத்தைப் பேசியதாகவும், இந்த மாநாடு பயனுள்ளதாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாட்டின் இடையே அங்கு வந்திருந்த தலைவர்களுடன் பேசியதாகவும், அதுவும் பயனுள்ள முறையில் அமைந்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
உலகின் முன்னேற்றத்துக்கும் செழிப்புக்கும் அனைத்து நாடுகளும் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டிய கடமை உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



