Puducherry: கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது!

புதுச்சேரி லாஸ்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.இந்தநிலையில்   புதுச்சேரி லாஸ்பேட்டை குமரன் நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து உதவியாளர் அன்வர் பாஷா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், வில்லியனூர் ஜி.என் பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் லாஸ்பேட்டை குமரன் நகரை சேர்ந்த ஸ்ரீதிவ்யா என்பதும் அப்பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரிடமிருந்து ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *