Sathuragiri Temple: 2 மாத தடைக்குப் பின் மீண்டும் அனுமதி!

Advertisements

மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 மாத தடைக்குப் பின் சதுரகிரி கோவிலுக்கு 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாகக் கடந்த 2 மாதங்களாகப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வருகிற 23ம் தேதி முதல் 26ம் தேதிவரை 4 நாட்களுக்குப் பக்தர்கள் செல்லலாம் என்று வனத்துறை அனுமதி அளித்துள்ளது. காலை 7:00 மணி முதல் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் அமைந்துள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இரவு நேரத்தில் கோவிலில் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களைக் கோயிலுக்கு எடுத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாகக் கடந்த இரண்டு மாதங்களாகச் சதுரகிரி கோவிலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *