Palani: அதிகாரியைத் தாக்கிய வட மாநில தொழிலாளர்கள்!

Advertisements

பழனியில் வடமாநில தொழிலாளர்கள்  குட்கா, பான் மசாலா விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனைக்காகச் சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை வட மாநில தொழிலாளர்கள் தாக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்குக் கார்த்திகை, மார்கழி, தைப்பூசத்தையொட்டி நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  இந்நிலையில் மேளம் தாளம், பூங்கொத்துகள், செல்போன் கவர்கள், சாமி சிலைகளைத் தயாரித்து வியாபாரம் செய்வதற்காக வட மாநில தொழிலாளர்கள் பழனி அருகில் உள்ள சிவகிரி பெட்டி ஊராட்சி அலுவலகம் பகுதியில் காலியிடங்களை ஆக்கிரமித்துத் தற்காலிக குடிசைகளை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை உள்ளூர் வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணன் என்பவருக்கு ரகசிய  தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சோதனை செய்வதற்காகச் சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணனை வட மாநில தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தாக்க முயற்சித்ததாகவும், அவர் தப்பி ஓடிக் காவல்துறையினருக்கு,  அவர் தப்பி ஓடியதாகவும் வீடியோமூலம் வாட்ஸ் அப்பில் தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வட மாநில தொழிலாளர்களிடமிருந்து 3 கிலோ அளவிலான குட்கா பொருட்கள் முதல் கட்டமாகப் பறிமுதல் செய்யப்பட்டு பெண் ஒருவரை விசாரணைக்காகழைத்து சென்றுள்ளனர்.

மேலும் காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வட மாநிலத் தொழிலாளர் உள்ளூர் வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் தகவல் அறிந்து விசாரணைக்காகச் சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை வட மாநில தொழிலாளர்கள் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *