Miami Open Tennis : அமெரிக்க வீராங்கனையை வீழ்த்திய அரீனா சபலென்கா.!

அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஆன் லீயை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஆன் லீயுடன் மோதினார். இதில், முதல் செட்டில் இருவரும் சளைக்காமல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில்   சபலென்கா 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப் பெற்று  3 ஆவது சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து, சபலென்கா மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் கேட்டி மெக்நாலியுடன் விளையாட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *