Hansika: தலைகீழாக தொங்கியபடி ஒர்க் அவுட் செய்த புகைப்படம் வைரல்!

Advertisements

நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் ஒர்க் அவுட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தன்னுடைய ஃபிட்னஸில் மிகவும் கவனமாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் உடலை வில்லாக வளைத்து, வெளியிட்டுள்ள ஒர்க் அவுட் போட்டோஸ் ரசிகர்களை மிரளவைத்துள்ளது.

பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. முதல் படத்திலேயே தன்னுடைய எலகண்டான அழகால் ரசிகர்களை கவர்ந்த ஹன்சிகாவை தென்னிந்திய ரசிகர்கள் குட்டி குஷ்பு என அழைத்து வந்தனர்.
Hansika

மேலும் அறிமுகமான ஓரிரு படங்களிலேயே… இவருடன் ஜோடி போட பல முன்னணி நடிகர்கள் விரும்பினர். அந்த வகையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் துவங்கி, தமிழில் விஜய் உட்பட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதே போல் சிம்புவுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா பின்னர் அந்த காதல் தோல்வியில் முடிந்தது.

ஹன்சிகா, குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில்… திடீர் என தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார். அதேபோது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஸ்லிம் ஃபிட் அழகியாக மாறி உள்ள… ஹன்சிகா, தன்னுடைய ஃபிட்னசை தொடர்ந்து மெயின்டெயின் செய்து வருகிறார்.

திருமணத்திற்கு பின்பும்… அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, உடலை வில்லாக வளைத்தும், தலைகீழாக தொங்கியபடியும் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *