மழையில் சாலையோரம் நின்றிருந்த மக்களிடம் சசிகலா நலம் விசாரிப்பு!

விழுப்புரம்: 

ஃபெஞ்சல் புயலால் விழுப்பு ரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தஞ்சாவூரிலிருந்து கார்மூலம் சென்னை நோக்கிச் சென்ற சசிகலா விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமம் அருகே கொட்டும் மழையில் சாலையோரம் நின்றிருந்த பொதுமக்களிடம் காரை நிறுத்தி நலம் விசாரித்து, மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.விழுப்புரம் அருகே வி.சாலை கிராமத்தில் சாலையோரம் நின்றிருந்த பொதுமக்களிடம் சசிகலா மழை பாதிப்புகுறித்து விசாரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *