Samantha Ruth Prabhu: உள்ளாடையோடு உல்லாச அருவியில் குளியல்!

நடிகை சமந்தா மலேசியாவில், உச்ச கட்ட கவர்ச்சியில் பிகினி உடை அணிந்து… உல்லாசமாகக் கொட்டும் அருவியில் குளியல் போட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சிங்கார சென்னையில் பிறந்து, வளர்ந்திருந்தாலும்… நடிப்பின் மீது இருந்த தீராத காதலும், நடிகை ஆகியே தீர வேண்டும் என்கிற முனைப்பும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு படத்தின் வாய்ப்பைச் சமந்தாவுக்கு பெற்று தந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிஸியான நடிகையாக மாறினார் சமந்தா.

குறிப்பாகத் தமிழில் டாப் நடிகர்களாக இருக்கும், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட இவர், தெலுங்கு திரை உலகிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார்.

தன்னுடைய முதல் பட ஹீரோவான நாகசைதன்யாவை உருகி உருகி காதலித்து, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணம் ஆன 4 வருடத்திலேயே காதல் கசந்ததால் இருவரும் ஒருமனதாக விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். திருமணத்திற்கு பின்பும் சரி, விவாகரத்துக்கு பின்பும் சரி, நடிப்பில் படு தீவிரம் காட்டி வருபவராகவே உள்ளார் சமந்தா.

அதிலும் கடந்த 2 வருடங்களாக அரியவகை தசை அழிச்சி நோயான மயோசிட்டிஸ் பிரச்சனையால் இவர் பாதிக்கப்பட்டபோதும் கூட, சிகிச்சை எடுத்துக் கொண்டே தான் ஒப்புக்கொண்ட ‘சாகுந்தலம்’ படத்தில் நடித்துக் கொடுத்தார். அதே போல், கைக்கால்களில் வலி இருந்த போதும். குஷி படத்தில் நடித்தார். இந்தப் படங்களை நடித்து முடிந்த பின்னரே மேற்கொண்டு சில சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு, ‘சிட்டாடல்’ வெப் தொடரில் நடித்தார்.

வெக்கேஷனுக்காக நடிகை சமந்தா தற்போது மலேசியா சென்றுள்ள நிலையில், அங்குப் பாறைகளுக்கு நடுவே… கொட்டும் அருவி நீரில், உச்சகட்ட கவர்ச்சியில் பிகினி உடை அணிந்து இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சமந்தாவின் இந்தக் கவர்ச்சி தரிசனத்தை பார்த்து உறைந்து போய் விட்டனர் இவரின் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *