
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தலைமையில் 32 பேர் திமுகவிலிருந்து விலகி புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவரது தலைமையில் 32 பேர் திமுகவில் இருந்து விலகி புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான ராஜா(எ)ஆசீர்வாதம் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
புதிதாக கட்சியில் இணைந்த அனைவருக்கும் ராஜா(ஏ)ஆசிர்வாதம் புதிய உறுப்பினர் அட்டை வழங்கி சால்வை அணிவித்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் கிளை கழக செயலாளராக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பச்சையப்பனை நியமனம் செய்தார். புதிதாய் கட்சியில் இணைந்தவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் பெயர் மற்றும் கொடியினை ஸ்டிக்கர் ஒட்டி மகிழ்ந்தனர்.
இதில் மாநில குழு உறுப்பினர் செல்வகுமார், இளைஞர் அணி மத்திய குழு உறுப்பினர் ஜேக்கப் ஸ்டான்லி, மாவட்ட குழு உறுப்பினர் விநாயகம், ஒன்றிய அமைப்பாளர் சிவகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் ஜோசப்லிங்கம், இளைஞரணி மாவட்ட குழு உறுப்பினர் ஜெகதீஸ்வர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


