Sakshi Agarwal: கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

Advertisements

பேண்ட் போட மறந்துட்டீங்களா எனக் கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

சட்டை மட்டும் அணிந்து சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டி நடிகை சாக்‌ஷி அகர்வால் நடத்திய போட்டோஷூட் பார்த்து ரசிகர்கள் வாய்டைத்துப் போய் உள்ளனர்.

அட்லீ இயக்கிய ராஜா ராணி படம்மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். இதையடுத்து ரஜினி உடன் காலா படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற இவருக்குப் பிக்பாஸ் வாய்ப்பு தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் வெங்கட் பிரபு இயக்கிய குட்டி ஸ்டோரி, ஆர்யாவின் டெடி, சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நான் கடவுள் இல்லை, பிரபுதேவாவின் பஹீரா போன்ற படங்களில் நடித்தார்.


தொடர்ந்து நடிகை சாக்‌ஷி அகர்வால் கைவசம் கெஸ்ட், தி நைட், புரவி, 120 ஹவர்ஸ், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் என அரை டஜன் படங்கள் உள்ளன. இப்படி பிசியாக நடித்து வந்தாலும் பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு சாக்‌ஷி அகர்வாலுக்கு கிடைக்கவில்லை.

டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பைத் தட்டி தூக்க வித விதமாகக் கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். அந்த வகையில் தற்போது வெறும் சட்டையை மட்டும் அணிந்து போட்டோஷூட் நடத்தி உள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் பேண்ட் போட மறந்துட்டீங்களா எனக் கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சாக்‌ஷி அகர்வாலின் கவர்ச்சியை வர்ணித்தும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *