Bhavana Balakrishnan: 38 வயதில் கவர்ச்சி!

Advertisements

விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனா பாலகிருஷ்ணனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள், ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உள்ளது…

தன்னுடைய 38 வயதிலும் யங் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும்… விதத்தில் அல்ட்ரா மாடர்ன் உடையில், ஜொலிக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போட்ட புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது …

விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனா பாலகிருஷ்ணன், ரேடியோ ஜாக்கியாகத் தன்னுடைய கேரியரை துவங்கி… பின்னர் படிப்படியாகத் தொலைக்காட்சியில் விஜே-வாக மாறியவர்.இவர் விஜய் 2011-ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மாகாபாவுடன் சேர்ந்து, தொகுத்து வழங்கியது இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியது.


குறிப்பாகப் பாவனாவின் ஸ்டைலிஷான தமிழ் உச்சரிப்பு, மற்றும் ஆங்கில புலமை போன்றவை பாவனாவை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.ஆனால் இவர் விஜய் டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு முன்பே, ராஜ் தொலைக்காட்சியில் பீச் கேர்ள்ஸ் என்கிற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின்னரே விஜய் டிவி இவருக்கு மற்றொரு அரங்கை அமைத்துக் கொடுத்தது.இதைத் தொடர்ந்து 2011 முதல் 2017 வரை இடைவிடாது, விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக அறியப்பட்டார்.


2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பானபோது தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து புரோ கபடி லீக், உள்ளிட்ட பல விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினி என்பதை தான் பாவனா பாலகிருஷ்ணன் 2018 ஆம் ஆண்டில் பாடகியாக அறிமுகமானார்.

தனது முதல் தனிப்பாடலான தி மாஷப் தொடரை வெளியிட்டார் .2020 ஆம் ஆண்டில், இசை இயக்குனர் தரனுக்காகத் தனது முதல் பின்னணி பாடலைப் பாடினார். “வீராதி வீரா” பாடல் யூடியூபில் ஐந்து இலட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ரமேஷை திருமணம் செய்து கொண்டு தற்போது மும்பையில் வசித்து வரும் இவர், தொடர்ந்து… ஹீரோயின்களை மிஞ்சும் வகையில் விதவிதமான புகைப்படங்களை வெளிட்டு வருகிறார்.

அதே போல் அவ்வப்போது பிக்பாஸ் பிரபலமும், சூப்பர் மாடலுமான சம்யுக்தாவுடன் இணைந்து சில டான்ஸ் ரீல்ஸ் செய்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.தற்போது பாவனா ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, விதவிதமான உடைகள் அணிந்து இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *