Saint Susaiyappa Festival: வெகுவிமரிசியாக நடைபெற்ற புனித சூசையப்பரின் ஆடம்பர தேர் பவனி!

Advertisements

புதுச்சேரியில் புனித சூசையப்பர் திருவிழாவை முன்னிட்டு புனித சூசையப்பரின் ஆடம்பர தேர் பவனியை பேராயர் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.

புதுச்சேரி பெத்திசமினார் மேல்நிலைப் பள்ளியில் புனித சூசையப்பர் திருவிழா மூன்று நாட்கள் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை பங்கு தந்தை ரோசாரியோ தலைமையில் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது இரண்டாம் நாளான திங்கட்கிழமை தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா அதிபர் பிச்சைமுத்து தலைமையில் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது

தொடர்ந்து மூன்றாம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை திருப்பலியை புதுச்சேரி கடலூர் மதுரை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் பள்ளி முதல்வர் தேவதாஸ் துணை முதல்வர் ஜான் பால் மற்றும் அருட்தந்தையர்களால் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இதில் ஏராளமான கிறிஸ்தவ பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் தொடர்ந்து புனித சூசையப்பரின் ஆடம்பர தேர் பவனியை பேராயர் தொடங்கி வைத்தார் இந்தத் தேர் பவனி காந்தி வீதி நீடராஜப்பர் வீதி மெஷின் வீதி வழியாகப் பேராலயம் வந்தடைந்தது.

அங்கு நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது பள்ளி முதல்வர் தேவதாஸ் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *