Lok Sabha Elections 2024: வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு காணொலி வெளியீடு!

Advertisements

புதுச்சேரி கடற்கரை சாலையில் வாக்காளர்களுக்கான  விழிப்புணர்வு காணொலியை தேர்தல் அதிகாரி குலோத்தங்கன் வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் என்ற திட்டத்தின் கீழ், வாக்காளர் விழிப்புணர்வு பிரத்யேக காணொலி வெளியீட்டு விழா புதுச்சேரி கடற்கரை சாலையில்நடந்தது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் டிஜிட்டர் திரையில் வெளியிட்டார். நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் யஷ்வந்த் மீனா, கல்லுாரி மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கூறுகையில், மக்களவை தேர்தலில் புதுச்சேரியில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 22 மையக்கருத்துக்கள், தினம் ஒரு கருத்தாக, வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மாநில எல்லையில் 10க்கும் மேற்பட்ட செக்போஸ்ட் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 35க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள், 24 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *