Gourav Vallabh: வலுவான எதிர்க்கட்சியாகக் காங்கிரசால் செயல்பட முடியவில்லை!

Advertisements

ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான கவுரவ் வல்லப் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மும்பை:மராட்டிய மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபத்தை கட்சியிலிருந்து நீக்குவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்த கவுரவ் வல்லப் தனது அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திசையில்லா பாதையை நோக்கிக் காங்கிரஸ் சென்று கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. சனாதனத்துக்கு எதிரான கருத்துகள் கூறவோ, நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்பவர்கள்குறித்து அவதூறு கூறவோ என்னால் முடியாது. எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வல்லப் எழுதிய கடிதத்தில்,

நான் காங்கிரசில் சேர்ந்தபோது இளைஞர்கள், மூத்த நிர்வாகிகளின் யோசனைகளை மதிக்கும் நாட்டின் பழமையான கட்சி என்று நான் நம்பினேன், ஆனால் சில காலமாக, புதிய சிந்தனைகள் கொண்ட இளைஞர்களால் கட்சியில் அனுசரித்துச் செல்ல முடியவில்லை என்று சில காலமாக உணர்ந்தேன். இளைஞர்களிடம் புதிய சிந்தனைகள் உள்ளன. திசையில்லா பாதையை நோக்கிக் காங்கிரஸ் சென்று கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வலுவான எதிர்க்கட்சியாகக் காங்கிரசால் செயல்பட முடியவில்லையெனக் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *