
சென்னை சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் விபத்து தொடர்பாகப் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மற்றும் மேலாளர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அஜாக்கிரதையாகச் செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நேற்று இரவு கனமழை பெய்தபோது, பெட்ரோல் பங்கில் 20-க்கும் மேற்பட்டோர் ஒதுங்கியுள்ளனர். அப்போது மேற்கூரை சரிந்து விழுந்ததில், பலர் படுகாயமடைந்தனர். பங்க் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், அந்தப் பெட்ரோல் பங்குக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

