
பாவூர்சத்திரத்தில் பெண்களை வைத்துப் பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்தைப் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள் எனப் பலரும் பயன்படுத்திவருகின்றனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தினுள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். அப்பொழுது பஸ் நிலையத்தில் உள்ள ஆண்கள் சிலரிடம் தன்னிடம் பெண்கள் உள்ளனர் என்றும் அதற்கு இவ்வளவு தொகை ஆகும் எனவும் கூறி பேசிக் கொண்டிருந்த கீழப்பாவூர் எழில் நகரை சேர்ந்த ஆறுமுகவேல் என்கிற அலர்ட் ஆறுமுகத்தை(35) போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து சுரண்டை செல்லும் பகுதியில் தனியாக அறைகள் எடுத்துப் பெண்களை வைத்துப் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனடியாக அவரைக் கைது செய்த பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தித் தென்காசி சிறையில் அடைத்தனர்.

