
Sai Pallavi
அலியாபட்டுக்கு பதிலாகச் சீதை வேடத்தில் நடிக்கச் சாய்பல்லவியை படக்குழுவினர் பரிசீலிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது…
தமிழ், தெலுங்கில் ராமராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்து இருந்தனர். ஆதிபுருஷ் என்ற பெயரில் தயாரான ராமாயண படத்தில் ராமராகப் பிரபாஸ், சீதையாகக் கீர்த்தி சனோன், ராவணனாகச் சயீப் அலிகான் ஆகியோர் நடித்து இருந்தனர்.

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்னொரு ராமாயண படமும் தயாராக உள்ளது. பாகுபலி கிராபிக்ஸ் காட்சிகளை மிஞ்சும் வகையில் அதிக பொருட் செலவில் 3 பாகங்களாக இந்தப் படத்தை எடுக்கின்றனர்.

நிதிஷ் திவாரி டைரக்டு செய்கிறார். அல்லு அரவிந்த், மது மந்தெனா ஆகியோர் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக அலியாபட்டும் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சினைகளால் படத்திலிருந்து அலியாபட் விலகி விட்டார்.

இதையடுத்து அலியாபட்டுக்கு பதிலாகச் சீதை வேடத்தில் நடிக்கச் சாய்பல்லவியை படக்குழுவினர் பரிசீலிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சாய்பல்லவியும் ராமாயண படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.


