இறுதி விசாரணை தனுஷ்- நயன்தாரா வழக்கு – சென்னை ஐகோர்ட்!

Advertisements

நடிகை நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களைத் தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ என்ற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ்-இல் வெளியானது.

இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான “நானும் ரவுடி தான்” படத்தின் காட்சி சில நொடிகள்வரை இடம்பெற்று இருந்தது.

இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டுத் தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர்மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

மேலும், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ்-இன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாகப் பதில் அளிக்கும்படி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். இந்தப் பதில் மனுக்களுக்கு, தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனுமீது ஜனவரி 8-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்குமீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.

அப்போது, நடிகை நயன்தாரா மீது நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *