நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள ‘தண்டல்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்வில் நடிகர் சந்தீப் ரெட்டி வாங்கா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இவரைப் பற்றி மேடையில் பேசிய சாய் பல்லவி, “எந்த வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாகப் பேசக்கூடியவர் சந்தீப் ரெட்டி” எனப் புகழ்ந்தார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய சந்தீப் ரெட்டி, “சாய் பல்லவியின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன்.

கடந்த 2017-ம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்க இருந்த சமயத்தில் நாயகியாகச் சாய் பல்லவியை நடிக்க வைக்க விரும்பினேன்.
அப்போது சாய் பல்லவியின் ஒருங்கிணைப்பாளர் என்னிடம் படம்குறித்து கேட்டார். காதல் கதை என்றும், கிளாமரான படம் எனவும் அவரிடம் கூறினேன்.
அதற்கு அவர், ‘அப்படியென்றால் உங்கள் படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைப்பதை மறந்துவிடுங்கள்’ எனப் பதில் அளித்தார்.
சாய் பல்லவி ஸ்லீவ்லெஸ் ஆடைகூட அணிய மாட்டார் என்றும் அவர் கூறினார். காலப்போக்கில் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளால் கதாநாயகிகள் சிலர் மாறி விடுவர்.
ஆனால் சாய் பல்லவி இப்போதும் சிறிதுகூட மாறாதது சிறந்தது” எனச் சந்தீப் ரெட்டி பாராட்டு தெரிவித்தார்.