Sachin Pilot: நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல சூழல் உருவாகிவருகிறது!

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல சூழல் உருவாகி வருவதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியதாவது:-அரியானா மாநிலத்தில் தற்போது எம்.பி.யாக இருக்கும் நபர் பா.ஜனதாவிலிருந்து விலகிக் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

ராஜஸ்தானில் கூட மக்களவை எம்.பி.யாக இருந்தவர் பா.ஜனதாவிலிருந்து விலகிக் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ஆகவே, தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எம்.பி.க்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜனதாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு, எங்களது தலைவர்களின் மீது நம்பிக்கை வைப்பவர்கள் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்களின் செயல்பாடுகள் மற்றும் கட்சிமீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

பல மாநிலங்களுக்குச் சென்றுள்ளேன். இந்தியா கூட்டணிக்கு நல்ல சூழல் உருவாகி வருகிறது. முக்கியமான போட்டி, குறிப்பாக வட இந்தியாவில் காங்கிரஸ்க்கும் பா.ஜனதாவுக்கும் இடையில்தான்.

இவ்வாவறு சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *