
பா.ஜ., ஆட்சியில் ஊழல், வாரிசு அரசியலுக்கு இடமில்லை. நான் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
புதுடில்லி: நான் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.
மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பயணத்தின் ஒரு பகுதியாக டில்லியில் மக்களைச் சந்தித்து பிரதமர் மோடி பேசினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் அரசின் நலத்திட்ட உதவிகளால் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர்.
1 கோடிக்கும் அதிகமான பேருக்கு மத்திய அரசின் மருத்துவ காப்பீடாக ஆயுஷ்மான் அட்டை வழங்கப்பட்டுள்ளது. முந்தைய கால போல ஆட்சியிருந்தால் மக்கள் அரசு அலுவலகங்களைச் சுற்றி வரும் நிலைமை தான் ஏற்படும்.
பா.ஜ., ஆட்சியில் ஊழல், வாரிசு அரசியலுக்கு இடமில்லை. நான் உங்கள் குடும்பத்தில் ஒருவர். நலத்திட்ட உதவிகள் கிடைக்க மக்களுக்கு வேறு எந்தத் தொடர்பும் கிடைக்க தேவையில்லை. பெண்கள் சுய உதவி குழுக்கள்மூலம் பயன் அடைந்து வருகின்றனர். அரசு விவசாயிகளுக்கு உதவும் வகையில் சேகரிப்பு நிலையங்களை அமைக்க உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

