ஆராட்டு திருவிழாவிற்காக சபரிமலை திருக்கோவில் இன்று மாலை திறப்பு

Advertisements

பங்குனி மாதம் என்றாலே ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து பாதயாத்திரை செல்வது வழக்கம் . அந்த வகையில் அனைத்து பக்தர்களும் சாமி வழிபாடு செய்வர். உலக பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழா 10நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. கொடியேற்ற விழாவுக்கே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது .

இதையடுத்து இன்று மாலை சபரிமலை திருக்கோவில் திறக்கபடவுள்ளது. தொடர்ந்து 10நாட்கள் திருவிழா நடைபெறுவதுடன் முக்கிய நிகழ்வான ஆறாட்டு வைபவம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. 18 நாட்கள் சபரிமலை நடைதிறக்கபடுவதையடுத்து, பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வாய்ப்புள்ளதாக, நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.ஆராட்டு திருவிழாவிற்காக சபரிமலை திருக்கோவில் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *