மத்திய அரசின் வேளாண் திட்டங்களின் கீழ் தமிழகத்திற்கு ரூ.355.88 கோடி நிதி அனுமதி.!

வேளாண் திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 355 கோடியே 88-லட்சம்  நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில வேளாண் அமைச்சர்கள் மற்றும் மாநில துறைச் செயலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ்சிங்-சவுகான் தலைமையில் காணொளி வாயலாக இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய அரசின் பிரதான் அமைச்சர் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா மற்றும் கிருஷ்ணோன்னதி-யோஜனா ஆகிய இரண்டு முக்கிய வேளாண்திட்டங்களின்கீழ், தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு இரண்டாம் தவணையாக ரூபாய் ஆயிரத்து183-கோடியே 11-லட்சம் நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி தமிழ்நாட்டிற்கு ரூபாய் 355-கோடியே 88-லட்சம் விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஆந்திர மாநிலத்திற்கு ரூபாய் 409-கோடியே 40-லட்சமும்,  ஒடிசாவிற்கு ரூபாய் 219-கோடியே 65-லட்சத்தையும், உத்தரகாண்ட் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு முறையே ரூபாய் 106-கோடியே 67-லட்சம்  ரூபாய்  91-கோடியே 51-லட்சத்தை  விடுவிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *