
கனிம வளங்களில் 25 ஆண்டுகளாக அடித்த கொள்ளையை சீரமைப்பதற்கு, தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில், அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நெற்கட்டும்செவல் பகுதியில் உள்ள பூலித்தேவன் அரண்மனையில், 311-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில். அரசு சார்பில், தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ராஜவ் ஆகியோர் பங்கேற்று பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவைத் தொடரந்;து, அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதலமைச்சர் ஜோசப்விஜய் உத்தரவின்பேரில், நெற்கட்டும் செவலில், பூலித்தேவனுக்கு மரியாதை செலுத்த வந்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், கர்நாடகா அரசு மிகவும் பிடிவாதமாக விவசாயிகளை பாதிக்கும் வகையிலே நடந்து கொண்டிருக்கிறது என்றும், காவிரி ஆணையம் உத்தரவையும் மதிக்காமல் கர்நாடகா அரசு செயல்பட்டு வருகிறது என்றும், இருக்கும் தண்ணீரை விவசாயிகளின் பயன்பாட்டுக்காக திறப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றும், கனிம வளங்களில் 25 ஆண்டுகளாக அடித்த கொள்ளையை சீரமைப்பதற்கு,
தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும், அதை த.வெ.க. அரசு மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறது எனவும், எங்கெல்லாம் முறைகேடுகள் இருக்கிறதோ அதை எல்லாம் முறையாக ஆய்வு செய்து, விவரங்களை சேகரித்து வருகிறோம் என்றும், ஒவ்வொன்றாக ஆதாரங்களுடன் ஊழலை வெளியிடுவோம் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.


