Job Vacancies: இன்றைய வேலைவாய்ப்புத் தகவல்கள் – 21/09/23

Advertisements

குறைந்தபட்சம் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்புப் படித்தவர்களுக்கு அவரவர் கல்வி தகுதிகளுக்கு ஏற்ப மாநில மற்றும் மத்திய அரசுகளில் பணிகள் காத்திருக்கின்றன. ஆனால், அந்தப் பணிக்கான அறிவிப்போ அல்லது தகவலோ எல்லாருக்கும் கிடைக்கின்றதா என்பதில் தான் பிரச்சனை உள்ளது. படித்து முடித்து விட்டு வேலை தேடுபவர்களுக்கும், கல்வி தகுதியின் அடிப்படையில் நல்ல பணி வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கும் இந்தத் தகவல் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

இன்றைய வேலைவாய்ப்புத் தகவல்கள்

இந்திய ராணுவத்தில் HQ Southern Command பணிக்கு மொத்தமாக 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேனேஜர், சமையல், தோட்ட வேலை உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியில் சேர்வதற்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்து இருந்தால் போதுமானது.  https://www.tamilanguide.in/hq-southern-command…/ என்ற இணையதளத்திற்கு சென்ற விண்னப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08-10-2023.

…> HQ Southern Command Recruitment 2023
. . . >  காலிப்பணியிடங்கள்:  24
. . . > பிரிவு வாரியாக:  MTS (Messenger), MTS (Daftary), Cook, Washerman, Mazdoor, MTS (Gardener)
. . . > கல்வி தகுதி: 10th, ITI
. . . > இறுதி நாள்:  08.10.2023
. . . > உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/hq-southern-command…/

கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் 54 பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளன. மெக்கானிக்கல், எலக்ட்ரிகள், எலக்ட்ரானிக்ஸ், சிவில், ஐடி படித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் சேர டிப்ளமோ மற்றும் எம்.காம் படித்திருந்தால் போதுமானது. அக்டோபர் 7ம் தேதிக்குள்  https://www.tamilanguide.in/csl-recruitment-2023-54…/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

…> Cochin Shipyard Ltd (CSL) Recruitment 2023
. . . >  காலியிடங்கள்: 54 Project Assistants (Mechanical, Electrical, Electronics, Instrumentation, Civil, Information Technology & Finance)
. . . >  கல்வி தகுதி: Diploma, M.Com
. . . >  இறுதி நாள்: 07.10.2023
. . . > உடனே விண்ணப்பிக்க: https://www.tamilanguide.in/csl-recruitment-2023-54…/

தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் 38 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆராய்ச்சி உதவியாளர், மேனேஜர் (கால்நடை) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு Bachelor of Veterinary Science மற்றும் Master of Veterinary Science படித்திருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் அக்டோபர் 19ம் தேதிக்குள் https://www.tamilanguide.in/tnpsc-recruitment-2023-38…/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

…> Tamil Nadu  TNPSC Recruitment 2023
. . . >   காலியிடங்கள்: 38 Research Assistant, Manager (Veterinary)
. . . > கல்வி தகுதி: B.V.Sc & A.H, M.V.Sc.
. . . > இறுதி நாள்: 19.10.2023
. . . > உடனே விண்ணப்பிக்க:  https://www.tamilanguide.in/tnpsc-recruitment-2023-38…/

அண்ணா பல்கலைக்கழகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் முதல் ஆராய்ச்சியாளர் வரையிலான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. புராஜெக்ட் சயின்டிஸ்ட், டெக்னிக்கல் அசிஸ்டண்ட், ஆராய்ச்சியாளர் என 11 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. டிப்ளமோ, பொறியியல், பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் 29ம் தேதிக்குள் https://www.tamilanguide.in/anna-university-recruitment…/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

…> Anna University Recruitment 2023
. . . > காலியிடங்கள்: 11 Project Scientist, Project Associate, Technical Assistant, Research Associate & Junior Research Fellow Posts
. . . > கல்வி தகுதி: Diploma, B.E/B.Tech, M.E/M.Tech
. . . > இறுதி நாள்: 29.09.2023
. . . > உடனே விண்ணப்பிக்க:  https://www.tamilanguide.in/anna-university-recruitment…/

முயற்சி இல்லாமல் எளிதில் எதுவும் கிடைப்பதில்லை. மேலே குறிப்பிட்டுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி நல்ல பணியில் சேர வாழ்த்துகள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *